பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) பாடவேண்டும்; பாடித் தொழுவாரைக் ”சொழவேண்டும். சொல்லியவே சொல்லி ஏத்த இறைவன் மகிழ்ச்சியுறுவர்; 167. தேவாரம் ஓதுவதால், கேட்பதால் வரும் பயன்-ஒதுதலின் சிறப்பு (188) சுந்தரர் அருளிய தேவாரப் பதிகங்களைக் கற்று வல்லவ ாானேர் அமரலோகம் பெறுவர் : அமரலோகம் ஆள்வர்"; வானகம் ஆள்வர்; வானுலகில் மிக்க இன்பத்துடன் இருப்பர்; வானவர்க்கும் தலைவராவர்; விண்ணுளோர் ஏத்த விண்ணரசு பெறுவர்; மூவுலகும் ஆள்வர் ; அப் பதிகங்களேச் சொன்ன வர், கேட்டவர் என்ற இருதிறத்தார்க்கும், அவர்களுடைய உற்ருர், உறவினர்க்கும் இரவிலேனும், பகலிலேனும் இடர் ஒன்றும் வராத ; அப்பதிகங்களைக் கேட்டு உகப்பவர் அழகியர்; தேவாரப் பதிகப் பாடல் பத்தையும் பத்தி செய்து, உள்ளுருகி, குடிகுடி வழியில், கித்தம் பாட வல்லவர்-அல்லல், இடர், இடும்பை, குற்றம், கடுமாற்றம், துயர், துன்பம், கரை, திரை, மூப்பு, கடலை, பாவம், (எழு) பிறப்பு, இறப்பு, வினைக்கட்டு-இவை ஒன்றும் இல்லாது விளங்கி நின்று சிவனடியைக் கூடுவர்; இன்ப வெள்ளத்துள் திளைப்பர் ; நிலம் பெறுவர்; புகழ் பெறுவர், தவநெறி சேர்வர்; தவலோகத்து இருப்பர்; மண்டல நாயகராய் வாழ்வர்; உலகர்க்கு மேலோராவர், புண்ணியசாய்ப் பொலிவர்; முத்தி பெறுவர்; விண்ணவரால் தொழப் பெறுவர்; சிவனுக்கு அன்பராவர்; சிவகதி நண்ணுவர்; சிவலோகம் எய்துவர். சிவனடி சேர்வர்; சிவைெடு கூடுவர்; பெருங்குலக்கவாம் அடியரொடு கூடிப் பதிகங்களைப் பிதற்றிப் பாடுதல் பெருமை கருவதாகும்; அத்தகைய பெரியோர்களே எம்மை ஆளுடைய ராவர் : அவர்களே எமது தலைமேற் பயில்வார்-என்கின் ருர் சுந்தார். தாம் பாடிய திருக்குழுக்குன்றப் பதிகத்தை ஒதித் கொழுபவரைத் தொழுமின்கள் எனச் சுந்தார் உபதேசிக்கின்ருர்.