பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) காத்தருளுக” என்று வேண்டினபோது, விடாமழையைத் தந்து, அகல்ை உண்டான சேதத்தைத் தவிர்க்க மீண்டும் பன்னிரு வேலி கொண்டவர் ; மதியையும் பாம்பையும் (பகை தீர்த்து) ஒருசேர வைத்துள்ள கருணையாளர் ; வினைக்கடலில் தடும்ாறும் உயிர்மீது .இாங்கி அருள்புரிந்து வீடுபேற்றின்ப ஆக்கநிலையைத் தருபவர். * = 28. கொள்கை [82(83)] - கள்ள மொழிகளைப் பேசிக் குற்றமான செய்கைகளைச் செய்யினும் அவைதமைக் குணமெனக் கொள்ளும் கொள்கை கொண்டவர் பெருமான்; ஞானசம்பந்தர், நாவுக் காசர், நாளைப்போவார், மூர்க்க நாயனர், சாக்கிய நாயனர், சிலந்தி, கண்ணப்பர்-ஆகிய இவர்கள் குற்றம் செய்யினும் அதைக் குணமாகக் கொண்ட கொள்கையினர். தேவிக்குத் கமது ஆகத்தில் ஒரு கூறு அளித்த கொள்கையாளர். 29. 6. [82(89)] தேவர்கள் தொழுதேத்தும் சீலம் பெரிதும் உடையவர் பெருமான் ; எழுந்த விஷத்தைக் கண்டு, அஞ்சி ஒடின தேவர்களுக்கு அருள்புரிய, அந்த விஷத்தைத் தாம் உண்டு தமது கண்டத்தே அதை அடக்கிவைத்த பித்தர் என்று சொலத்தக்க சீலத்தினர் ; பெருமானுடைய சீலமும் குணமும் சிந்தித்து வியக்கத் தக்கன. 80. செய்கை [82(93)] பெருமானுடைய செய்கை எல்லாம் யார்க்கும் விளங்காதன ; தக்கன் யாகத்தை அழித்துச் சூரியன் ஆகிய தேவர்களைத் தண்டித்த செய்கையை என்னென்பது! பெருமழையைத் தந்தும் அதைத் தவிர்த்தும் பன்னிரு வேலிகொண்ட திருவிளையாடலைப் புரிந்தனர் பெருமான் ; வெறுக்கத்தக்க செய்கைகளைச் செய்து வினைக்கேடான பல செருக்குப் பேச்சுக்களைப் பேசித் கிரிவார் அவர் (பலி வேண்டிச் செல்லும்போது.) - I -