பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தேவார ஒளிநெறி (அப்பர்) அப்பர் அருளியது மூன்று திருமுறைக ளெனவும், சுந்தார் அருளியது ஒரு திருமுறை யெனவும் நம்பியாண்டார் நம்பியால் குைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கற்பார்க்கு 'இன்றியமையாப் பாயிரம் போன்ருெளிர்வது தேவார ஒளி நெறியாகும். அம்மட்டு மன்று; அவற்றின்கண்ணுள்ள சொல்லும் பொருளும், கருத் துக்களும், ஒப் |மைப் பகுதிகளும், இறைவன் இறைவி மாண்பு களும், மெய்யடியார்களின் திருவரலாறுகளும், திருக்கோவில் வழிபாட்டு முறைகளும், இவற்றின் கண் காணப்படும் அருந் தொடர்கள், ஆட்சிமுறைகள், உவமை நயங்கள், பிற சான்ருேர் நூல்களிற் காணப்படின் அவற்றை விளக்கமுறக் காட்டுங் காட் டுக்களும், பிறவும் எளிதின் உணர்ந்து இறவாவின்பம் எய்துமாறு அகரவரிசையில் நன்கு விளக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வொளி நெறித்தோற்றமும், மற்றுள்ள சிறப்புக் களும், இதனை யாத்தளிக்கும் அருளாசிரியர் மாண்புகளும், சம்பந்தர் தேவார ஒளிநெறி ՞ւն பகுதிகள் மூன்றனுள் நடுப் பகுதிக்கண் காணப்பெறும் பதிப்புரையில் நன்கு விளக்கினம். ஆண்டுக் காண்க. இந் நால் அப்பர் பெருமானர் அருளிய தேவார விளக்க ம்ாகும். இதன் கண், ஆராய்ச்சித் தலைப்பு 1 முதல் 75 வரை அடங்கியுள்ளன. மொத்தத் தலைப்பு 190 உள், எஞ்சியகை அடுத்த பகுதியா க வெளிவரும். இதன் ஆசிரியர் கிருவாளர், தணிகைமணி, ராவ்பகதுர் வ. சு. செங்கல்வராய பிள்ளை, எம். ஏ. அவர்களாவர். o எஞ்சிய பகுதிகளும் சுந்தரமூர்த்தி நாயனர் திருமுறை ஆய்வுகளும் விரைவில் வெளிவரும். அப்பர் பெருமானின் முதற் பகுதி நாற்பது படிவங்களைக்கொண்டு திகழ்கின்றது. இச் செயற்கருஞ் செயலைச் செய்தற்குப் பல்லாற்ருனும் தகுதியுடையார் இங் நாலாசிரிய ரவர்களேயாவர். இவர்கள் பன் மொழிப் புலமையும்; பன்னூலறிவும் ஒருங்கு வாய்ந்த நன்மையர்,