பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

யான தமிழ் மக்கள்—தமிழ் ராஜ்யத்தின் ஜனநாயக வாழ்வில் பரிபூரணமாகப் பங்கெடுத்துக்கொள்ள முடியும். இதுபோல் கேரளத்திலும், கன்னடத்திலும், ஆந்திரத்திலும், செய்யவேண்டும். இவ்வாறு இந்திய யூனியன் முழுவதிலும் செய்யப்படுகிறபொழுது, இந்திய மக்கள் முழுவதும் ஜனநாயக வாழ்வில் முழுப்பங்கு எடுத்துக் கொள்ள சிறந்த வாய்ப்புக் கிடைக்கும். இந்த வாய்ப்பை ஆக-அதி தமிழனும், மலையாளியும் இதர மக்களும் பெறச் செய்யவே எல்லையை ஜில்லா, தாலுகா, பிர்க்கா அடிப்படையில் வகுக்கக்கூடாதென்றும், கிராம அடிப்படையில் தான் வகுக்கவேண்டும் என்றும் திட்டவட்டமாகச் சொல்லுகிறோம்; சட்டசபைகளிலும் பேசினோம்.

பற்றாக்குறைதான்

மொழிவழி ராஜ்யங்களாக, கிராம அடிப்படையில் எல்லை வகுத்துச் சீரமைத்தால், அப்பொழுதும் கேரளம் ஆகச் சிறிய ராஜ்யமாகத்தான் இருக்கும். மத்தியப் பிரதேசமும் உத்தரப் பிரதேசமும் ஆகப் பெரிய ராஜ்பங்களாகத்தான் இருக்கும். கேரளத்தின் ஜனத் தொகை மிகக் குறைவாகவும் உத்தரப் பிரதேசத்தின் ஜனத் தொகை மிகக் கூடுதலாகவும்தான் இருக்கும். (I) கேரளம் மட்டுமல்ல, தமிழகமும் இதர பல ராஜ்பங்களும் ஒவ்வொரு விதத்தில் சுயதேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத பற்றாக்குறை ராஜ்யங்களாகவே இருக்கும்

ஒவ்வொரு ராஜ்யமும் சுயதேவைப் பூர்த்திசெய்து கொள்வதென்பது சாத்யப்பாடற்ற கொள்கை. நமது ராஜ்யங்கள் தனித்தனி நாடுகள் அல்ல. இந்திய யூனியனில் பிரிக்க முடியாத ஜீவனுள்ள அங்கங்கள். உலகில் மிகப் பெரியதொரு நாடான இந்தியாவே இன்று பிற நாடுகளின் உதவியை எதிர்பார்க்கும் நிலையிலிருக்கிறது. பிரிட்டன்கூட அமெரிக்காவிடம் கையேந்தத்தானே செய்கிறது. முதலாளி உலகில், உலக முழுவதையும் சுரண்டும் அமெரிக்க ஐக்ய நாடு மட்டுமே இன்று பிற நாடுகளுக்கு உதவும் நிலைமையில் இருக்கிறது. சோவியத் யூனியனும் இதர மக்கள் ஜனநாயக நாடுகளும் சுய தேவைப் பூர்த்தி யுடையவைகளாக இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நமது ராஜ்பங்கள் ஒவ்வொன்றும் தன்னிறைவோடு விளங்க வேண்டுமென்று பசல் அலிக் குழு பாதை காட்டினாலும் சரி, மற்றவர்கள் யோசனை கூறினாலும்சரி, அது நடவாத காரியம்.

மத்திய சர்க்கார் உதவி

இந்திய யூனியன் சுயதேவைப் பூர்த்தியோடு விளங்க வேண்டும்; விளங்க முடியும். பின்தங்கிக் கிடக்கிற, பற்றாக் குறையான ராஜ்யங்களுக்கு யூனியன் அரசாங்கம் விசேஷ உதவியளித்து, அவைகளை முன்னேறிய ராஜ்பங்களோடு, வாழ்வில் ஈடுஜோடாக நிற்கும்படி செய்யவேண்டும். இது சாத்தியப்பாடு. இதோடு ராஜ்யங்களிடை-