பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

யிலே சகோதர உணர்ச்சியை வளர்த்து, பரஸ்பர உதவி செய்து முன்னேறும்படி தூண்ட வேண்டும். பஞ்சசீலக் கோட்பாடு நாடுகளுக்கு மட்டுமல்ல, ராஜ்யங்களுக்கும் பொருந்தும்.

மொழிவழியாக ராஜ்யங்கள் பிரிக்கப்பட்டு ஜனநாயக வாழ்வில் முழுப்பங்கு கொள்வதோடு, பொருளாதாரத் தேவைப் பூர்த்திக்கு ராஜ்யங்கள் மத்திய சர்க்காரின் உதவியை நாடவேண்டும். மத்திய சர்க்காரும் தேவையான, நியாயமான உதவி திட்டவட்டமாகக் கிடைக்குமென்ற நம்பிக்கையை ராஜ்யங்களுக்கு உண்டுபண்ண வேண்டும். தேசீய ஒற்றுமையைக் கட்டிக்காக்கவும், யூனியன் ஆட்சி வலுப்படவும், ராஜ்யங்களின் ஜனநாயக வாழ்வு வளர்ச்சியடையவும் இது ஒன்றுதான் வழி. மாறாக, பொருளாதார சுயதேவைப் பூர்த்தியைப் பிரதான நோக்கமாகக்கொண்டே ராஜ்யங்கள் சீரமைக்கப்பட வேண்டும். மொழியைப் பிரதானமாகக் கொண்டல்ல என்ற கொள்கை ஒவ்வொரு ராஜ்யமும் தான் வாழ வித்தெடுக்கும் போக்கையே வளர்க்கும். செல்வாதாரம் பெருகவேண்டுமென்று காரணம் காட்டி, இதர மக்களின் பிரதேசங்களை தன் ராஜ்யத்தில் வைத்துக் கொள்ள நியாயம் பேசி, தகராறுகளைக் கப்பும் கவருமாக வளர்க்கும். இனப்பகை, மொழிப்பகை, ராஜ்யப் பகைகளுக்குத் தூபதீபம் போட்டு, தேசீய ஒற்றுமையை உடைக்கும். எல்லை தாலுக்காக்களை அடிப்படையாகக்கொள்வதும் இதன் நாசகார விளைவாக எல்லை, தகராறுகள் பந்துமித்திர களத்திராதிகளாகப் பல்கிப் பெருகுவதும் தவிர்க்கமுடியாத நிகழ்ச்சிகளாகும்.

சுமுகமான பைசல்

எனது சட்டசபைப் பேச்சில் மேற்கூறிய கருத்துக்களை நன்றக எடுத்துக்காட்டினேன். தார் கமிஷனும், அதைத் தொடர்ந்து ஜே. வீ. பி.க் குழுவும் அவை வரையறுத்த ராஜீய சீரமைப்புக்கான பிரதான கொள்கையும் அதன் அடிப்படையில் பசல் அலிக் குழு காட்டும் சுயதேவைப் பூர்த்திக் கொள்கையும் இன்றைய காங்கிரஸ் தலைமையின் கொள்கையும் மொழியின் முதல்தரப் பங்கை மறுத்து, ராஜ்யச் சீரமைப்பிலும் எல்லை வகுப்பிலும் அனர்த்தத்தை விதைத்து கலவரத்தையும் குழப்பத்தையும், சண்டை சச்சரவுகளையும் வளர்த்து, தேசீய ஒற்றுமைக்குப் பதில் ராஜ்யப் பகைமைகளை அறுவடை செய்யத் தொடங்கியிருக்கின்றன. என்பதை எடுத்துக்காட்டினேன். எல்லைப் பிரச்னை—குறிப்பாக தேவிகுளம்-பீர்மேடு பிரச்னை—தமிழ் மக்களுடையவும் சென்னை ராஜ்யத்தினுடையவும் பிரச்னை மட்டுமல்ல: மலையாள மக்கள், திரு—கொச்சி ராஜ்யம், யூனியன் அரசாங்கத்தினுடைய பிரச்னையும் ஆகும் என்பதை எடுத்துக்காட்டினேன். சிக்கல் நிறைந்த பிரச்னையாக உருவாக்கப்பட்டிருக்கும் தேவிகுளம்—பீர்மேடு பிரச்னைகளுக்குத் தீர்வுகாண இரு ராஜ்ய மக்களும், இரு