பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

25—12—55 'தின மலர்' செய்தியைக் கீழே தருகிறேன் எனது சிறு குறிப்போடு.

1. 'தென் திருவிதாங்கூரிலுள்ள நான்கு தாலூகாக்களையும், கமிஷன் சிபார்சுப்படி, உத்தேச கேரள ராஜ்யத்திலிருந்து பிரிவினை செய்யக் கூடாது" என்ற காங்கிரஸ் பி. சோ. ஆதரித்த தீர்மானத்தை எதிர்த்தார்கள். இதில் கே.எஸ். பி., ஆர். எஸ்.பி.யையும் எதிர்க்க வைத்தார்கள். தி.த.நா. காங்கிரஸோடும், சுயேச்சை தமிழ் அங்கத்தினர்களான டி. எஸ். ராமசாமி, சட்டநாதன் ஆகியவர்களோடும் நின்று எதிர்த்தார்கள்.

2. நீலகிரி ஜில்லாவிலுள்ள கூடலூர் கேரள ராஜ்யத்தில் இணைக்கப்பட வேண்டும் என்ற திருத்தத்தை ஆதரித்துள்ளனர். தி.த.நா.காங்கிரஸ் மட்டும் எதிர்த்திருக்கிறது. ஆனால் டி. எஸ். ராமசாமியும் சட்டநாதனும் இந்தத் திருத்தத்தை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

3. "கேரள ராஜ்யம் உருவான பிறகு எல்லை சம்பந்தமான மாற்றங்கள் தேவைப்பட்டால், நடுநிலைமை கொண்ட ஒரு எல்லைக் கமிஷனை நிறுவியோ அல்லது சம்பந்தப்பட்ட ராஜ்யங்கள் நட்புறவோடு பேச்சு வார்த்தை நடத்தியோ தீர்மானித்துக் கொள்ளலாம்" என்று வந்த தீர்மானத்திற்கு சாதகமாக ஓட்டளித்தனர். இதில் இடதுசாரி கட்சிகளோடு தி.த.நா.காங்கிரஸையும் இரண்டு தமிழ் சுயேச்சை அங்கத்தினர்களையும் சாதகமாக ஓட்டளிக்கவைத்தனர். காங்கிரஸும் பி. சோ. கட்சியும் எதிர்த்தன.

4. "பாஷாவாரி நிர்ணயத்தின் மீது கிராமங்களை அடிப்படை உறுப்புகளாகக் கொள்ள வேண்டும். எல்லைக்கோடு தொடர்பான ஒன்றாக இருக்க வேண்டுவதோடு தனியாக உள்ள திட்டுக்களை விட்டு விடவேண்டும். தண்ணீர், இதர வசதிகள் மீது கேரளத்தின் தேவையை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்" என்ற தீர்மானத்தில் சாதகமாக ஓட்டளித்தனர். இடதுசாரிகளும், டி. எஸ். ராமசாமி, சட்டநாதன் ஆகியவர்களும் சாதகமாக ஓட்டளித்தனர். தி. த.நா. காங்கிரஸ் நடுநிலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது. இதிலும் காங்கிரஸ், பி.சோ.வை தனிமைப்படுத்தி எதிர்ப்பைக் குறைத்தனர்.

இந்தச் செய்திக் குறிப்புகளை நிதானமாகச் சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு ஒரு உண்மை நிச்சயமாகப் புலனாகாமல் போகாது. அந்த உண்மை என்ன? திரு—கொச்சி கம்யூனிஸ்டுகள் வெறும் கேரள மாகாணப் பித்தர்கள் அல்ல. அவர்கள் இரு ராஜ்யங்களும் சகோதர ராஜ்யங்களாக வாழவேண்டும். இரு மக்களும் சகோதர மக்களாக வாழவேண்டும். இவ்வாறு வாழ்வதின் மூலம் தேசீய ஒற்றுமை உண்மையில்—உதட்டளவல்ல—வலுப்படவேண்டும் என்று விரும்புகிறவர்கள். ஆகவேதான், கேரளத்தின் தடிப்பேறின மாகாணப் பித்தர்களான காங்கிரஸ்-பி. சோ. கூட்டணியை அம்பலப்