பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

எல்லைத் தகராறுகளுக்குப் பைசல் காண வேண்டுமென்று கூறியதோடு, தேவிகுளம்-பீர்மேடு தாலூகாக்களின் தண்ணீர், மின்சாரம் ஆகியவைகளைப் பொறுத்தமட்டில், கேரளத்தின் நலனைக் குறிப்பாகக் கணக்கிலெடுத்துத் தீர்வு காண வேண்டுமென்றும் கூறினோம்.

இன்று இன்னும் ஸ்தூலமாகக் கூற வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. எனவே,18—1—56ல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ்நாடு கமிட்டி தான் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறது:—

"தொடாச்சியான பிரதேசத்தையும், கிராமத்தையும் அடிப்படையாகக் கொண்டு, தேவிகுளம்-பீர்மேடு பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அப்படி பரிசீலனை செய்யும்பொழுது தேவிகுளம் பீர்மேடு தாலூகாக்களில் பெரும்பகுதி தமிழ்நாட்டுக்கு சேரவேண்டும். ஒரு சிறு பகுதி கேரளத்திற்கு போகவேண்டும். இதேபோல் கூடலூர் தாலூகாவில் பெரும்பகுதி கேரளத்திற்கு சேரவேண்டும். சிறுபகுதி தமிழ்நாட்டுக்கு சேரவேண்டும். கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலுள்ள இதர எல்லா எல்லைகள்பற்றிய பிரச்சினைகளும் தொடர்ச்சியான பிரதேசத்தையும் கிராமத்தையும் அடிப்படையாக கொண்டு தீர்க்கப்படவேண்டும். தேவிகுளம்-பீர்மேடு தாலூகாக்களில் பெரும்பகுதி தமிழ்நாட்டுடன் சேருவதால் கேரளத்தின் பொருளாதார தேவைகளுக்கு (தண்ணீர், மின்சாரம் முதலியன) உதவி செய்வதற்கு சென்னை ராஜ்ய சர்க்காரும் கேரள சர்க்காரும் விவாதித்து முடிவுசெய்யவேண்டும்.

"இந்த அடிப்படையில் இந்திய சர்க்காரின் தீர்ப்பு மாற்றப்பட வேண்டும். இதற்கான ஒன்றுபட்ட கிளர்ச்சியை ஜனநாயகவாதிகள் அனைவரும் மேற்கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்".

சுதந்திர-முற்காலத்தில், ராஜ்யச் சீரமைப்பில், மொழிக்கு முதலிடம் கொடுத்த காங்கிரஸ் மேலிடம், சுதந்திர-பிற்காலத்தில் மொழிக்கு முதலிடம் கொடுப்பதைக் கைவிட்டுவிட்டது. தார் கமிஷன், ஜே. வி. பி. கமிட்டிகளின் கருத்தை ஆதார பீடமாகக்கொண்டு, சீரமைப்புக் கமிஷன் மொழிக்கு முதலிடத்தை மறுத்துவிட்டது. சுயதேவைப் பூர்த்திக்கு முதலிடம் கொடுத்தது. இந்திய முதலமைச்சர் நேரு,