பக்கம்:தைத் திங்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 தைத் திங்கள்

'முன்னி யவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழை யேலோ ரெம்பாவாய்’

(16)

எனக் கன்னியர் மழை பெய்ய வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒருத்தியை யொருத்தி கதவு தட்டி எழுப்பிக் கொண்டு வைகறையில் நீராடச் செல்லும் காட்சி திருவெம்பாவையில நயம்பட நவிலப்பட் டுள்ளது.

இந்த மார்கழிச் செயல்கள் எல்லாம் தை நோன்பு முடிப்பதற்காக முன் கூட்டித் தொடங்கிச் செய்யப் பட்டு வரும் முன்னாயத்தங்களே என்றும், பின்னர்த் தை நோன்பின் சிறப்பு மறைய அதன் இடத்தை மார்கழி நோன்பு நாளடைவில் பிடித்துக் கொண்டது என்றும் முன்பு ஓரிடத்தில் கூறப்பட்டிருப்பது ஈண்டு மீண்டும் நினைவுக்கு வரவேண்டும். ஆண்டாள் திருப் பாவையின் முதல் பாட்டின் முதலில் உள்ள,

'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்'

என்னும் பகுதி, பரிபாடல் என்னும் சங்கத் தொகை நூலிலுள்ள ஒரு (11) பாட்டின் பகுதியை அப்படியே நினைவுறுத்துகிறது. அந்தப் பரிபாடல் பகுதியைப் பார்த்துத்தான் ஆண்டாள் தமது பாடலைப் பாடி னாரோ என்னவோ (யாரும் சினங் கொள்ள வேண்டா)-என எண்ணலாம்போல் தோன்றுகிறது. அப்பரிபாடல் பகுதி வருமாறு:

“ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து மாயிருந் திங்கள் மறுநிரை ஆதிரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/117&oldid=1323547" இலிருந்து மீள்விக்கப்பட்டது