பக்கம்:தைத் திங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

103


இதுகாறுங் கூறியவற்றால், பண்டு தமிழகத்தில், ஆதிரை நீராடலினும் தைந் நீராடலே தலையாயதாகவும் தொன்மைப் பெருமையுடையதாகவும் கருதப்பட்ட தெனவும், தைந் நீராடலுக்காகச் செய்யப்படும் தொடக்க விழாவே ஆதிரை நீராடல் எனவும் தெளியலாம். இந்தக் கருத்துக்குச் சங்க நூல்கள் மாபெருஞ் சான்று பகர்வதை மறக்கவும் முடியாது -மறுக்கவும் முடியாது-மறைக்கவும் முடியாது.

மார்கழி-ஆதிரை நீராடலைப் பற்றித் திருப் பாவையில் விதந்து சிறப்பித்துக் கூறியுள்ள ஆண்டாள். நாச்சியார் திருமொழி என்னும் தமது வேறொரு படைப்பில், தைந்நீர் ஆடித் தவ நோன்பு மேற்கொள்வது பற்றிக் கூறியுள்ளமை ஈண்டு எண்ணத்தக்கது. நாச்சியார் திருமொழியில் முதலாந் திருமொழியாக உள்ள முதல் பத்து, தன்னைக் கண்ணனிடம் கூட்டும்படி காமனைத் தொழுவது பற்றியதாகும். தைத் திங்கள் முழுவதும் தரையைத் தூய்மை செய்து தெருவையும் அணி செய்து வைகறையில் நீராடிக் காமனுக்கு நோன்பிருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. முதல் இரு பாடல்கள் வருமாறு:


"தையொரு திங்களும் தரைவிளக்கித்
     தண்மண்டல மிட்டு மாசி முன்னாள் ஜயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
     அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/120&oldid=1323720" இலிருந்து மீள்விக்கப்பட்டது