பக்கம்:தைத் திங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

107


காலத்தில் இறக்குமதியானதாக இல்லாமல் - தொன்று தொட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வழி வழி வந்த மரபு விழாவாக மிளிர்வதாலும் இதனைத் 'தமிழர் திருநாள்' என வழங்குவதில் தவறொன்றுமில்லை. தமிழர்கள், வெளியிலிருந்து வந்த இடைக்காலத்தில் வந்த விழாக்களை வெறுக்கவும் இல்லை என்பதும் ஈண்டு எண்ணத்தக்கது.

இந்திய அரங்கில் என்றில்லாமல் உலக அரங்கிலும் இந்த நாள் ஏதேனும் ஒரு வகையில் சிறப்புற்றிருக்கலாம்.எனவே, தமிழர்கள் இந்த நாளைத் தம் சிறப்புத் திருநாளாகத் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் பொருத்தமே என்பது புலப்படும். இனி, தமிழர்களின் 'தைத் திங்கள் விழாச்சூழ்நிலையை உலக அரங்குடன் ஒத்திட்டு ஆய்ந்து காண்பாம்.

அறுவடை விழா:

உலகின் பல்வேறு பகுதிகளிலும் அறுவடை விழா (Harvest Festival)என்னும் பெயரில் ஒரு விழா நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. இவ்விழா ஆசியாவிலும் உண்டு - ஐரோப்பாவிலும் உண்டு - அமெரிக்கச் சிவப்பிந்தியர்களிடையேயும் உண்டு. பண்டைக் காலத்திலேயே யூதர்கள் இதனைப் பெரு விழாவாகக் கொண்டாடியுள்ளனர். இந்த நாளிலும் ஆசியாவில் சையாம் எனப்படும் தாய்லாந்து நாட்டில் அறுவடை விழா பெருஞ் சிறப்புடன் நடை பெறுவதைப் பற்றிப் பலரும் அறிந்திருக்கலாம். இதனை விரிப்பின் ஒரு தனிக் கட்டுரை யாகுமாதலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/124&oldid=1323563" இலிருந்து மீள்விக்கப்பட்டது