பக்கம்:தைத் திங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர்கள் பார்வையில் ஆசிரியர்கள்


சுந்தர சண்முகனார் ஒரு குட்டி மாநிலமாகிய புதுச்சேரியில் இருந்து கொண்டு ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய தமிழ்ப் பணிகளைச் செய்து கொண்டுள்ளார்.

பேராசிரியர்,முனைவர் திரு.க. , சஞ்சீவி,

எனது முப்பதாண்டு தமிழ்த்துறை வாழ்க்கையில் சுந்தர சண்முகனாரின் தமிழ் அகராதிக் கலை, போன்ற தமிழ்மொழி பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூலை நான் படித்ததில்லை.

நெல்லைப் பேராசிரியர் திரு. அருணாசலக் கவுண்டர்

சுந்தர சண்முகனாரின் தமிழ் அகராதிக் கலை போன்ற தமிழ்மொழி பற்றிய அரிய ஆராய்ச்சி நூலை இனி எழுத முடியாது.

பேராசிரியை திருமதி. கனகசுந்தரம் இராணிமேரிக் கல்லூரி, சென்னை.

பேராசிரியரின் திருவள்ளுவர் ஆய்வு நூல்கள், மிக நுண்மையான அதுவரை திறனாய்வாளர் எவரும் கண்டறியாத ஆழ்பொருள் பொதிந்தவை. அவரை பழைய குறள் உரையாசிரியர்கள் பதின்மரையும் மிஞ்சியவர் என்று கூறின் அது மிகையாகாது.

பேராசிரியர் முனைவர் தி. முத்துகண்ணப்பன்,

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விளங்கிய இணையற்ற தமிழறிஞர்களில் முதலில் வைத்து மதிக்கத் தக்கவர் அமரர் சுந்தர சண்முகனார் ஆவார்....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/15&oldid=1323573" இலிருந்து மீள்விக்கப்பட்டது