பக்கம்:தைத் திங்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

133


புத்தாண்டுப் பொருத்தம்:

தைத் திங்கள் தொடக்கத்தைப் புத்தாண்டுப் பிறப்பு என உறுதி செய்வதற்கு உரிய பொருத்தப் பாடுகள் முன்பே விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அப் பொருத்தப்பாடுகள் வருமாறு: தூய்மை செய்தல், தொடர்ந்து பலநாள் விழா கொண்டாடுதல், தெய்வ பூசனைகள். உழவரையும் தொழிலாளரையும் போற்றுதல், நலம் வினவல், விருந்து, பரிசளிப்பு. வாழ்த்து, ஏழை எளியவர்க்கு உதவி, நோன்பு, நீராடல், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கள், திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகள், பல்வேறு வகை விழாக்கள், தொழிலாளர் ஓய்வு, நாள் கொள்ளல், புதுவினை தொடங்குதல் முதலியன தைத் திங்களில் நடைபெறுவது, தைத் திங்கள் பிறப்பு தமிழரின் புத்தாண்டுப் பிறப்பாகும் என்னும் கொள்கைக்குப் பொருத்தமான சான்றாகும்.

தித்திக்கும் தைத் திங்கள்:

பழந் தமிழ்ச் சங்க இலக்கியங்கள் மாதத்தைத் திங்கள் என்னும் சொல்லாலேயே குறிப்பிட்டுள்ளமை முன்பே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அதிலும், தைத் திங்களே மிகுதியாகப் பழந்தமிழ் நூல்களில் பயின்று வந்துள்ளது என்பதும் ஈண்டு நினைவுகூரத்தக்கது, திங்கள் என்பது சந்திரனைக் குறிக்கும் தமிழ்ச்சொல். சந்திரன்,நாம் வாழும் இந்தப் பூவுருண்டையைச் சுற்றி வரும் ஒரு துணைக் கோளாகும். நில உருண்டையை (பூமியை) நிலா உருண்டை (சந்திரன்) ஒரு முறை சுற்றிவர முப்பது நாட்கள் ஆகின்றன. முப்பது நாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/150&oldid=1323745" இலிருந்து மீள்விக்கப்பட்டது