பக்கம்:தைத் திங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தைத் திங்கள்

வரமாட்டான் என்று ஐயுறுகிறாள், பொங்கல் விழாவின்போது வந்தால், தொழிலாளர்கட்கும் கலைஞர்கட்கும் பொங்கல் பரிசு தரவேண்டியிருக்கும் என்று அஞ்சித் தலைவன் வரமாட்டான் என்று ஐயுறுகிறாளோ என்னவோ! ஆனால் தோழி சோர் வடையவில்லை; தலைவன் வந்துவிடுவான் என்று நம்புகிறாள்; தலைவிக்கு எப்படியாவது ஆறுதல் உண்டாக்க வேண்டும் என முயல்கிறாள்; தலைவியிடம் சொல்கிறாள்: "என் அருமைத் தலைவியே! இந்தத் தைத் திங்கள் நாளில் இன்னும் அவர் வர வில்லையே என்று செங்கழுநீர் மலர் போன்ற கண்களிலிருந்து நீ துளிக்கும் நீரைத் துடைப்பதற்காக இதோ அவர் விரைந்து வந்துவிட்டார்" - இது தோழி கூறிய ஆறுதல் மொழி. இதனை,


“::...தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்...
ஒண்செங் கழுநீர் அன்னநின்
கண்பனி துடைமார் வந்தனர் விரைந்தே."

என்னும் (269-ஆம்) அகநானூற்றுப் பாடல் பகுதி அறிவிக்கிறது. இன்னும் தலைவன் வரவில்லை யாயினும்,'வந்தனர் விரைந்தே' என வந்து விட்ட தாகக் கடந்த காலத்தில் கூறியுள்ளாள் தோழி. உறுதி பற்றி இவ்வாறு கூறலாம் என விதி உள்ளது. இன்னும் உண்ண அமராத ஒருவன், வெளியே அழைத்துச் செல்ல வந்த நண்பனிடம், 'இதோ சாப்பிட்டு விட்டேன்' என்று கூறும் வழக்காறு போன்றது இது. தைத் திங்களில் தலைவனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/25&oldid=1322953" இலிருந்து மீள்விக்கப்பட்டது