பக்கம்:தைத் திங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 தைத் திங்கள்


"வேம்பின் பைங்காய் என்தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின்பாலே"

என்னும் (916ஆம்) குறுந்தொகைப் பாடலும் ஒப்பு நோக்கற்பாலது. ஒருகாலத்தில் தலைவி தந்த பச்சை வேப்பங்காயும் இனித்ததாகக் கூறிய தலைவன், இப்போது தலைவிமேல் வெறுப்புற்றிருப்பதால், இனிய குளிர்ந்த சுனை நீரை அவள் தைத் திங்களில் தந்த போதும் அது வெய்யதாய் உவர்ப்பதாகக் கூறு கின்றான்; அவனது அன்பில் அவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது-என்பது பாடலின் கருத்து. தைத் திங்கள் நல்ல நாளிலே தந்த தண்ணிய சுவை நீரையும் வெறுக்கிறான் என்று கூறியிருப்பதின் வாயிலாக, தைத்திங்களின் சிறப்பைக் குறிப்பாய் உணர்த்தியுள்ளார் குறுந்தொகைப் புலவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/29&oldid=1320480" இலிருந்து மீள்விக்கப்பட்டது