பக்கம்:தைத் திங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார் 31

எடுத்துக் குடையாகப் பிடித்துப் பெருமழையினின்றும் ஆயர்களைக் காத்துப் பூசனையை ஏற்றுக் கொண்டானாம். தோல்வியுற்ற இந்திரன், ஆயர்கள் தன்னையும் வணங்கும்படி அருள் செய்யவேண்டு மெனக் கண்ணனை வேண்டிக் கொண்டானாம். கண்ணனும் அவ்வாறு நடைபெற அருள்புரிந்தானாம். அதன்படி ஆயர்கள், போகியன்று இந்திரனையும் மறுநாள் பொங்கலன்று கண்ணனையும் அதற்கும் மறுநாள் மாட்டுப் பொங்கலன்று மாடுகளையும் வழிபட்டார்களாம். போகி விழாவிற்குப் பொருத்த மாக இப்படியொரு கதை சொல்லப்படுகிறது. இது வடநாட்டுக் கதை. இந்தக் கதையமைப்பின்படி தமிழ் நாட்டில் போகி விழா நடப்பதாகப் புகல்வதற்கில்லை.

இந்திரன் வழிபாடு தமிழகத்தில் தொன்று தொட்டு நடைபெற்று வருவதாகும். ஆயர்கள் முல்லை நிலத்திற்கு உரியவர்கள் எனவும் அந்நிலத்திற்கு உரிய தெய்வம் திருமால் எனவும் பழந்தமிழ் இலக்கணஇலக்கிய நூல்கள் கூறுகின்றன மூவாயிரம் ஆண்டுக்கு முன்தோன்றிய தொல்காப்பியம், இந்திரனை மருத நிலத்திற்கு உரிய சிறப்புத் தெய்வமாகக் கூறுகிறது. சிறப்பாக, நீர்வளம் - நிலவளம் மிக்க மருத நிலத்தார் இந்திர வழிபாடு செய்வார்களாம். இதனைத் தொல்காப்பியத்தாலும் அதற்கு நச்சினார்க்கினியர் வரைந்துள்ள உரையாலும் இன்ன பிறவற்றாலும் அறியலாம்.

"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/48&oldid=1323620" இலிருந்து மீள்விக்கப்பட்டது