பக்கம்:தைத் திங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார் 33

களில் நடைபெறும் நடைமுறைகளைக் காணுங்கால், 'இந்திர வழிபாடு' என்ற உணர்வுடன் செய்யப் படுவதாகத் தெரியவில்லை. போகி விழா சில வீடு களில் மாரியம்மன் வழிபாடுபோல் நடத்தப் பெறுகிறது. அன்று காலை சிலர் கூழ் படைக்கிறார்கள்; ஏழை களுக்குப் படைத்த கூழை ஊற்றுகிறார்கள்;அதனுடன் மாவு இடித்து வைத்துப் படைப்பது தவறாது. கூழ்க் கலயத்தைச் சுற்றி வேப்பிலை கட்டியிருப்பார்கள். படைக்கும் இடத்திலும் நிரம்ப வேப்பிலை வைக்கப் பட்டிருக்கும். இது மாரியம்மன் படையல் போல் தோன்றுகிறதல்லவா? ஒருசிலர் காலையில் கூழ் படைப்பதற்குப் பதில் கஞ்சி காய்ச்சிப் படைத்து ஏழைகளுக்குக் கஞ்சி ஊற்றுவர். ஒருசிலர் காலையில் சோறு பொங்கித் தயிர் ஊற்றிக் கிளறிப் படைப்பதும் உண்டு. எல்லோருமே, கூட மாவு இடித்து வைத்துப் படைப்பதை நிறுத்துவதில்லை. ஊருக்கு ஊர்-இனத் திற்கு இனம்-வீட்டிற்கு வீடு படையலில் வேறுபாடு இருப்பது இயற்கையே!

இது காலைப் படையல். இரவிலோ கொழுக் கட்டை செய்தும் கீரை துவட்டியும் பலவகைக் காய்கறிகள் ஆக்கியும் படைப்பது வழக்கம் இதிலும் இடத்துக்கு இடம் சிறு சிறு வேறுபாடுகள் உண்டு.

காத்தவராயன்:

சில குடும்பங்களில் போகியன்று 'காத்தவராயன்' என்னும் சிறு தெய்வத்திற்கும் படையல் நடைபெறும். வழக்கமாகக் கடவுளுக்குப் படைக்கும் இடத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/50&oldid=1323622" இலிருந்து மீள்விக்கப்பட்டது