பக்கம்:தைத் திங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 தைத் திங்கள்


யிடமிருந்தோ ஏதேனும் ஒன்றை வாங்கிக் கொண்டு வந்துவிடுவர்.

ஒரு கதை சொல்வதுண்டு. பெண்பார்க்கச் செல்லும் மாப்பிள்ளை வீட்டார்மாப்பிள்ளையயும் பெண் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்களாம். பெண் வீட்டில் உணவு படைக்கும்போது, தொட்டுக்கொள்ள மிளகாய்ப் பொடி வைப்பார்களாம். மிளகாய்ப் பொடிக்கு நல்லெண்ணெய் விட வேண்டுமே! மாப்பிள்ளையின் இலையில் எண்ணெய்க்குப் பதிலாக எள் ஒரு பிடி வைப்பார்களாம்.மாப்பிள்ளை எள்ளைப் பிழிந்து எண்ணெய் வரவழைத்துக் கொள்ள வேண்டுமாம். அவ்வளவு ஆற்றல் மிக்க இளைஞனுக்கே பெண் கிடைக்குமாம். இந்தக் காலத்தில் அவ்வாறு எள் வைப்பின், இதோ வருகிறேன் என்று மாப்பிள்ளை எழுந்து கம்பி நீட்டி விடுவார். இந்தக் காலத்தில் எண்ணெய் விட்டாலும் குழைப்பதற்கு முடியாது என்பதற்காகத்தான், எண்ணெய் விட்டுக் குழைத்த மிளகாய்ப் பொடியாய் வைக்கின்றனர் போலும்!

இப்படியாக மாப்பிள்ளைக்குச் சில 'தேர்வு' முறைகள் உண்டு. இவற்றுள் ஏறு தழுவுதலும் ஒன்றாகும். அஃதாவது,-கொம்பு கூர்சீவி விரட்டி விடப்பட்ட முரட்டுக் காளையை எதிர்த்துத் தழுவிக் கட்டிப் பிடித்து அடக்குபவனுக்கே குறிப்பிட்ட பெண் மணமுடித்து வைக்கப்படுவாள். இந்நிகழ்ச்சி ஏறு தழுவுதல் எனப்படும். ஏறு என்றால் காளை. அந்த நாளில் முல்லை நிலத்து ஆயர்களிடம் இந்த வழக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/63&oldid=1323699" இலிருந்து மீள்விக்கப்பட்டது