பக்கம்:தைத் திங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

47


மிகுதியாயிருந்தது. இதனைத் தொல்காப்பிய - நச்சினார்க்கினியர் உரைப் பகுதியாலும் கலித் தொகைப் பாடலொன்றாலும் விளக்கமாக அறியலாம். தொல்காப்பியம் - அகத்திணையியலிலுள்ள 'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்' என்னும் (53-ஆம்) நூற்பாவின் கீழ் நச்சினார்க்கினியர் வரைந்துள்ள,

"...முல்லை நிலத்து ஆயரும் ஆய்ச்சியரும் கந்தருவமாகிய களவொழுக்கம் ஒழுகி வரையுங் காலத்து அந்நிலத்தியல்பு பற்றி ஏறு தழுவி வரைந்து கொள்வரெனப் புலனெறி வழக்காகச் செய்தல் இக்கலிக்கு உரித்தென்று கோடலும் பாடலுள் அமையாதன என்றதனாற் கொள்க. 'மலிதிரை யூர்ந்து' என்னும் முல்லைக் கலியுள் 'ஆங்கணயர்வர் தழூஉ 'என்னுந் துணையும் ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறி, 'பாடுகம் வம்மின்' என்பதனால் தலைவனைப் பாடுகம் வாவென்றாட்கு அவளும்'நெற்றிச் சிவலை... மகள்,' ஒருக்குநாமாடு .. மகன்' என்பனவற்றான் அலரச்சம் நீங்கினவாறும் அவன்றான் வருத்தியவாறுங் கூறிப் பாடிய பின்னர், தோழி 'கோளரிதாக... உச்சி மிதித்து’ என எமர் கொடை நேர்ந்தார் எனக் கூறியவாறுங் காண்க."

என்னும் உரைப்பகுதியில் ஏறு தழுவுதலும் அதன் நோக்கமும் நான்கு விளக்கப்பட்டுள்ளன. தொல்காப்பி யத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் கலித் தொகைக்கும் உரையெழுதியுள்ளார் ஆதலின்,'மலிதிரை யூர்ந்து' என்னும் கலித்தொகைப் (முல்லைக்கலி-4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/64&oldid=1323700" இலிருந்து மீள்விக்கப்பட்டது