பக்கம்:தைத் திங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார் 63

ஐந்தாம் நாள் ஆற்றுத் திருவிழா முடிந்த பின்னரே பொங்கல் விழா ஓரளவு நிறைவு பெற்றதாகக் கருதுகின்றனர். அவர்கள் ஆற்றுத் திருவிழாவைப் பொங்கல் விழாவின் ஓர் உறுப்பாகவே கொண்டு பூரிக்கின்றனர். கடலூர்ப் பகுதியில் பெண்ணை யாற்றங்கரையிலும், மற்ற ஊர்களில் ஆங்காங்குள்ள ஆற்றங்கரைகளிலும் திருவிழா நடைபெறும்.

ஆற்றுத் திருவிழாவன்று, அவ்வட்டாரத்து ஊர் களிலுள்ள திருக்கோயில்களிலிருந்து இறையுருவங்கள் அணி செய்யப்பெற்றுக் குறிப்பிட்ட நீர்த்துறைக்குக் கொண்டு வரப்படும். அவ்விடத்தில் மக்கள் திரளாகக் குழுமி நீராடி இறை வழிபாடு செய்து செல்வர். இவ்விழாவிற்கென்று கடைகள் பல போடப்பட்டிருக் கும். மக்கள் வறிதே திரும்பாமல், விழாவிற்கு வந்த அடையாளமாக ஏதேனும் பொருள் வாங்கிச்செல்வர்.

சில ஊர்களில் வளர் பிறையில் வருகின்ற இரத சப்தமி'யன்று-அஃதாவது-அமாவாசை கழிந்த ஏழாம் நாளன்று ஆற்றுத் திருவிழா நடைபெறும், சில ஊர் களில் தை ஐந்தாம் நாள், இர தசப்தமி நாள் ஆகிய இரு நாட்களிலும் ஆற்றுத் திருவிழா நடைபெறும். கடலூரில் இவ்விரு நாட்களிலும் பெண்ணையாற்றின் வெவ்வேறு துறையில் விழா நடைபெறும். சில இடங்களில் தை அமாவாசையிலும் சில இடங்களில் தைப் பூசத்திலும் ஆற்றுத் திருவிழா நடக்கும். கடலூரில் தை அமாவாசையில் கடல் நீராடு விழா நடைபெறும். தைந்நீராடலின் தனிச்சிறப்பு பின்பு தனித்தலைப்பில் விளக்கப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/80&oldid=1320830" இலிருந்து மீள்விக்கப்பட்டது