பக்கம்:தைத் திங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

65


தைப் பூசம்:

தைப் பூசம் என்றதும் வடலூரும் வள்ளலாரும் நினைவிற்கு வரலாம். தைத் திங்களில் பூசநாள் மிகவும் சிறப்புடைத்து தைத் திங்களில் பூச நாளும் முழு நிலாப் பருவமும் ஒரே நாளில் இருக்கும். சித்திரைத் திங்களில் சித்திரை நாளும் முழு நிலாப் பருவமும், வைகாசியில் விசாகமும் பருவமும், கார்த்திகையில் கார்த்திகையும் பருவமும், மார்சழியில் ஆதிரையும் பருவமும், மாசியில் மகமும் பருவமும், பங்குனியில் உத்திரமும் பருவமும் ஆண்டுதோறும் பெரும்பாலும் ஒரே நாளில் இணைந்து வருவது போல, தைத் திங்களில் பூசமும் பருவமும் ஆண்டு தோறும் பெரும்பாலும் ஒரே நாளில் இணைந்து வரும். அதனால் தைப் பூசம் சிறப்புடைத்து.

நல்ல நிகழ்ச்சிகள் எத்தனை உண்டோ-அத்தனையும் தைப் பூசத்தில் நடைபெறும். குழந்தைக்கு முடி எடுத்தல்,காது குத்துதல், எழுத்தறி வித்தல், வீடு கடைகால் எடுத்தல், புது வாயில்படி வைத்தல். புதுமனை புகுதல். புது அடுப்புப் போடுதல். புதுக் கணக்குப் போடுதல், புதுக்கடை திறத்தல், புது நெல் குதிரில் கொட்டுதல், புது நெல் அவித்தல், புது நெல் குத்திப் படைத்தல், வயலில் வேலை தொடங்குதல், தொழிற் கூடத்தில் வேலை தொடங்குதல்,புது வேலை தொடங்குதல்,திருமணம் செய்தல் முதலிய நற்செயல்கள்-மங்கல நிகழ்ச்சிகள் அனைததும தைப் பூசத்தில் நடைபெறும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/82&oldid=1323656" இலிருந்து மீள்விக்கப்பட்டது