பக்கம்:தைத் திங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 தைத் திங்கள்



    'பெரும் புலர் விடியலின் விரும்பிப்
     போத்தந்து
     தழையும் தாரும் தந்தனன்
     இவனென
     இழையணி ஆயமொடு தகுநாண்
     தடைஇத்
     தைஇத் திங்கள் தண்கயம் படியும்
     பெருந்தோள் குறுமகள் அல்லது
     மருந்துபிறி தில்லையான் உற்ற
     நோய்க்கே’

என்னும் (80-ஆம்) பாடல் பகுதியால் அறியலாம். குறித்த காதலன் கிடைக்க வேண்டும் என அவள் தைத் திங்களில் எதிர்ப்பார்த்திருப்பதும், தன்னையே விரும்பித் தைத் திங்களில் தவங்கிடக்கும் அவளே தனது துயர் நீக்கும் அருமருந்து என அவன் புலம்புவதும் தைத் திங்களுக்கும் திருமணத்திற்கும் உள்ள தொடர்பைக் கோடிட்டுக் காட்டு கின்றனவன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/93&oldid=1321102" இலிருந்து மீள்விக்கப்பட்டது