பக்கம்:தைத் திங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

81

அம்மானை'என்று சொல்லிக் கொண்டே ஆடுவதால் அதற்கு 'அம்மானை ஆடுதல்' என்று பெயர் வழங்கப் படுவதும், பொங்கல் படைக்கும் போது 'பொங்கலோபொங்கல்' என்று முழங்கிக் கொண்டு படைப்பதும் இன்ன பிறவும் ஈண்டு ஒப்பு நோக்கற் பாலன.

தவம் தந்த தவம்:

தைத் திங்களில் நீராடுதல் ஒரு தவப் பேறாகக் கருதப்படுகிறது. இந்தத் தவப்பேறு முன் செய்த தவத்தால் கிடைக்கக் கூடியதாம்-அஃதாவது-முற் பிறவியில் நல்ல தவம் செய்திருப்பவர்களுக்குத்தான், இப்பிறவியில் தையில் நீராடும் தவப்பேறு கிடைக்குமாம். இதனை முன்காட்டிய பரிபாடல் பாட்டுப் பகுதியை அடுத்துள்ள,


      "தீஎரிப் பாலும் செறிதவம் முன்
       பற்றியோ
       தாய் அருகா நின்று தவத்
       தைந்நீர் ஆடுதல்"

என்னும் பகுதி தெரிவிக்கிறது.தாயின் அருகிலே நின்று தைந் நீராடுதல் இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது காண்க. வயதில் முதிர்ந்த பெண்டிர் துணைக்காகக் கன்னியர் அருகில் நிற்பது ஒரு புறம் இருக்க,-தவத் தைந் நோன்பிற்காக நீராடும் முறையை அறிவிப்பதற் காகவும் அருகில் இருப்பது மரபு. இதனை முன் காட்டிய "முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப் பனிப்புலர்பு ஆடி" என்னும் பரிபாடல் பகுதியாலும் உணரலாம். இச்செய்தி கொங்குவேள் மாக்கதையிலும், .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/98&oldid=1323689" இலிருந்து மீள்விக்கப்பட்டது