உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வ.கோ. சண்முகம்


இருபது பைசா வுக்கே
இலைச்சருகு கிடைக்க வில்லை!
அறுபது பைசா வுக்கோ
அஞ்சாறு பக்கோ டாக்கள்!
வருவோர்கள் நிற்க வேண்டும்!
வந்ததையே 'தள்ள வேண்டும்!
இரைச்சலோ மீண்சந்தைபோல்
இப்படியோர் காலம் வேண்டாம்!

‘எருதின் பின்னே உலகம்’!
என்றிடும் வள்ளு வத்தினர்
தாரகம் உணர்ந்தே வாழ்வைத்
தரிசாக ஆக்கி டாதோர்
ஓரணியாய்த் திரண்டு கூடி
உள்ளார்ந்த அமைதி, அன்பை
சீர்ததும்ப வளர்த்த அந்தத்
தெய்வீகக் காலம் வேண்டும்!