பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

21


இளைத்த நிழலில்...


காதல் ராணிகள்!
கண்ணீர்ச் சிலைகள்!
சாதல் அடைந்தே
சாந்தியைக் கண்ட
அழயாப் பெண்மைகள்!
அழகுப் பொம்மைகள்!
நித்தியப் புதுமையும்
நீண்ட புகழும்
மெத்தவும் கொண்ட
காவியக் கன்னிகள்!

‘அனார்க்கலி’ 'லைலா’
‘ஜூலியட்டே என்பது
உங்கள் பெயர்கள்!
பூனைகளை இப்படியா
பிள்ளைகள்போல் வளர்ப்பது?