இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28
வ. கோ. சண்முகம்
கூழே யாயினும்
பகிர்ந்தே குடிப்போம்!
மகிழ்வும்; நெகிழ்வும்
மருந்தும்; விருந்தும்;
புகழும்; இகழும்
நீங்களும் பெறுவரீர்!
இந்த உறவு
இனிய உறவாய்
எந்த நாளும்
இருக்க வேண்டும்
தயையும் அணைப்பும்
தாய்க்கரங் களாகும்!
இயைந்த நீங்களும்
இதிகாசம் படைப்பர்!
('மயிர்ப்பூ மழலை'களாய் வீட்டில் வளர்த்த செல்லப் பூனைகளைப் பற்றி, கவிஞர் ஆசையாய் வார்த்த கவிதை இது.)
(1974)