பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

37


சூனியத்தின் ஓவியத்தில்...!


கோடிக் கோடிப் பணிணெடுத்தே
குரல்கள் வந்து பாடிடினும் - கண்ணே,
ஓடித் தேடித் தென்றலே
ஊமையாகி ஓயுது! - உன்னால்
ஊனும் கனலாய்க் காயுது!

விளக்குத் துப்பும் ஒளிமழையில்
விண்ணும் கூடத் தோயுது! - கண்ணே,
வளர்க்கும் இருளில் ஒருமனையின்
வாசல் மட்டும் புரளுது! - உன்னால்
வாழ்வு மொட்டும் கருகுது!