பக்கம்:தொடாத வாலிபம், 2010.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நக்கல் நித்தம் பிறக்கும் இரத்த வெயில் உலகின் இருட்டை இழுத்து எறிந்தது! எழுந்தேன், விழிகள் எனக்குமுன் எழுந்தன! சேர்த்து மனைவியைப் போர்த்திய உடம்பில் போர்வையை எடுத்துப் போர்த்துக் கொண்டு, வெளுத்த உலகின் வெளிப்புறம் நடந்தேன். துடிக்கும் அலைகள்; தாமரை; ஊரில் படுத்துக் கிடக்கும் பெருமலை; மாந்தளிர், பனித்துளிக்கூட்டம் அனைத்தும் மின்னின! "வெளிமான்" என்னும் வேந்தனைக் குறித்துப் பெருஞ்சித் திரனார் பாடிய பாடலைப் பாடிக் கொண்டே போகையில், நெருஞ்சிமுள் நடக்கும் கால்தனில் நறுக்கெனத் தைத்தது.