பக்கம்:தொடாத வாலிபம், 2010.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

உவமைக்கவிஞர் சுரதா 11 குளக்கரை வந்தேன், கோதை ஒருத்தி, போரிடும் அம்புப் பார்வையால், தோள்தனில் ஈரப் புண்செய்து என்னை அனுப்பினாள்! தோலுடல் எளியத் தொடர்ந்து நடந்தேன். வீதியின் வழியாய் விரைந்து போகையில், மலரின் குழியில் மணிநிற வண்டுகள் விழுந்து கிடக்கும் விபத்தைக் கண்டேன். வாய்க்கால் தாண்டி வரப்பிலே நடந்தேன், வயலில் நிறுத்திய பயிரின் வகைகள் தண்ணீர் கேட்டு என்னை நிறுத்தின. மூடிக்கிடந்த மடையைத் திறந்து அவற்றின் தாகம் அடக்கினேன், நடந்தேன். முள்ளுவேல் கருவேல் மரத்தைக் கண்டு பற்குச் சொடிக்கப் பறந்தேன், ஓடித்தேன். திரும்பினேன், கண்கள் திரும்பின வேறிடம். பாழ்மண் டபத்தின் பக்கமாய் நின்ற வயோதிகக் கருங்கல் வாவென் றழைத்தது. ஊமைக் கல்லிடம் உடனே ஓடினேன்.