பக்கம்:தொடாத வாலிபம், 2010.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொடாத வாலிபம் 12 அந்தக் கல்லின் அங்கம் முழுவதும், எழுத்து வரிசை இருப்பதைப் பார்த்து ஆசையாய் அதனை வாசிக் கலானேன். 'வெண்பூதி யார்' என்னும் பெண்கவி யின் மகள், கொல்லன் அடித்துக் கொடுத்த வாளேந்தி, கழுமலம் எனும்சீர் காழிச் சண்டையில் எதிர்த்த எதிரியை எதிர்த்து, புகழொடு இறந்தாள் என்ற சிறந்த சரித்திரம் அந்த வரிகளில் அடங்கி இருந்தது. அந்தநாள் தமிழரை; அப்போது பெண்கள் இருந்த நிலையை; மாதர்க்கு ஆண்கள் தந்த சுதந்தரத் தன்மையை; ஒருமுறை நினைத்தேன் எனது நெஞ்சம் குளிர்ந்தது! வீர மங்கையின் வாழ்க்கையைச் சொல்லும் நடுகல் லேநீ வாழ்க! என்று வாழ்த்தி இடம் பெயர்ந்தேனே!