பக்கம்:தொடுவானம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாத்தமிழ்


 சவேரி திரிபுடை

எடுப்பு

எந்த மொழியானாலும் சொந்த மொழிபோ லுனக்
கின்பம் தருவ துண்டோ ? தம்பி !

மேல் எடுப்பு

தந்தை தாய் அறியாத தடுக்குக் குழவி வாயில்
வந்து தவழும் 'அம்மா” மாத்தமிழ் அல்லவோ ?

அமைதி

சாலைக் கிளிமொ ழியில் ஒலைப் படபடப்பில்
தவழ்ந்து நெளிந்து பாயும் அருவி முணுமுணுப்பில்
நீலக் கடலலையில் கோலக் குயிலிசையில்
நினைத்துப்பார் நந்தமிழ் அனைத்திலும் கேட்குதடா


வந்தவர் ஆரியர் தமிழால் செழித்தார் !
மக்கள் மனம்மயக்கித் தமிழைப்பின் அழித்தார்!
கொந்தவர் தமிழர் சற்றேகண் விழித்தார்!
நூல்காட்டி ஏய்த்தவர் ஆந்தைபோல் விழித்தார்!


16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/18&oldid=1342874" இலிருந்து மீள்விக்கப்பட்டது