பக்கம்:தொடுவானம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்னல் தமிழுக்குண்டோ?


சண்முகப்பிரியா ஆதி

எடுப்பு

கன்னித் தமிழ்வளர்த்த தென்னவன் நாட்டினில்
இன்னல் தமிழுக்குண்டோ? - தம்பி !

மேல் எடுப்பு

தென்னிலங்கை முதல் வேங்கடம் ஈறாகச்
சிந்தைக் கினிமை நல்கும் தந்தைதாய் மொழியான

அமைதி

நஞ்சாம் ஆரியம் கலக்க நமையழிக்க
நடுநடு வேதுருக்க மொழிகள் படைஎடுக்க
அஞ்சி ஆங்கிலம் படிக்க துப்பாக்கி கண்டு
அடங்கி ஒடுங்கிக் கிடக்க
பிஞ்சாம் உரிமை கிடைக்க - ஆளவந்தோர்
பித்துப்பிடித்தே இந்தி செத்த மொழி திணிக்க
வஞ்சகர் சூழ்ச்சி அழிக்க - மறத்தமிழர்
வாழ்வைக் கொடுத்துத் தமிழ் வாழ்வை நிலைக்கச்செய்தார்.


17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/19&oldid=1342832" இலிருந்து மீள்விக்கப்பட்டது