இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இன்னல் தமிழுக்குண்டோ?
சண்முகப்பிரியா ஆதி
எடுப்பு
கன்னித் தமிழ்வளர்த்த தென்னவன் நாட்டினில்
இன்னல் தமிழுக்குண்டோ? - தம்பி !
மேல் எடுப்பு
தென்னிலங்கை முதல் வேங்கடம் ஈறாகச்
சிந்தைக் கினிமை நல்கும் தந்தைதாய் மொழியான
அமைதி
நஞ்சாம் ஆரியம் கலக்க — நமையழிக்க
நடுநடு வேதுருக்க மொழிகள் படைஎடுக்க
அஞ்சி ஆங்கிலம் படிக்க — துப்பாக்கி கண்டு
அடங்கி ஒடுங்கிக் கிடக்க
பிஞ்சாம் உரிமை கிடைக்க - ஆளவந்தோர்
பித்துப்பிடித்தே இந்தி செத்த மொழி திணிக்க
வஞ்சகர் சூழ்ச்சி அழிக்க - மறத்தமிழர்
வாழ்வைக் கொடுத்துத் தமிழ் வாழ்வை நிலைக்கச்செய்தார்.
17