பக்கம்:தொடுவானம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொறுத்திடக்கூடுமோ?

வராளி

ஜம்பை
          எடுப்பு

பிரிவைப் பொறுத்திடக் கூடுமோ-உள்ளம் பின்னிக் கலந்தபின் வாழ்விலே.

       மேல் எடுப்பு 

திரியை விலக்க எரியுமோ -சின்ன குத்து விளக்குதான் தோழியே.

         அமைதி

பொன்னலை பாய்செக்கர் வானத்தில்-கதிர் ஓடிப் புகுந்திடும் நேரத்தில் கன்னத்தைக் கிள்ளுது தென்றலே-இன்பக் காதலன் மேல் எண்ணம் ஓடுதே. கோவலன் வாய்குழல் ஒசையால்-பசுக் கூட்டம் திரும்பிடும் ஆசையால் காவி நிறம்படர் அக்தியைக்-காணக் காதலன் மேல் எண்ணம் ஓடுதே. கூடு திரும்பிடும் புள்ளினம்-அந்திப் பூவைக் குறுகிடும் புள்ளினம் ஏடவிழ் அல்லியைக் காணவே-இன்பக் காதலன் மேல்எண்ணம் ஓடுதே. வானை இருள்மெல்லத் தாவுதே-அலை வந்து கரையைத் தழுவுதே கூனற் பிறைநுதற் ருேழியே-இன்பக் காதலன் மேல் எண்ணம் ஓடுதே.

             28
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/30&oldid=1318627" இலிருந்து மீள்விக்கப்பட்டது