பக்கம்:தொடுவானம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடமை மறவாதே! சிம்மேந்திரமத்திமம் ஆதி

       எடுப்பு

கடமை மறவாதே-உன் கன்னித் தமிழர்க்குற்ற இன்னல் களையவேண்டும்.

       மேல் எடுப்பு

உடைமை பொதுவாக்கி உழைப்பைப் பகிர்ந்தாலே உயர்வில்லை தாழ்வில்லை அயராதே அஞ்சாதே.

        அமைதி

ஏழை பணக்காரன் ஈசன் விருப்பம் என்றால் ஏய்ப்பதே அல்லாமல் ஏதேனும் பொருளுண்டோ? கூழை விளைக்கும் வான் தென்றலுக் கிங்குண்டோ? குறுகிய மனப்பான்மை கொடியவர்க் கருளுண்டோ?

          44
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/46&oldid=1321668" இலிருந்து மீள்விக்கப்பட்டது