பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 1O7 பாரதி அரவிந்தரை அறிவார். பாரதி அடிக்கடி ஆஸ்ரமத்துக்குப் போயிருக்கார். - அரவிந்தரை நல்லாத் தெரியும். ஆனால் அரவிந்தர் பாரதியைத் தம் சீடராகக் கொள்ள வில்லை. காரணம், அரவிந்தர் உபதேசம் பண்ணி இருக் கிறதா இருந்தா பாரதி வாழ்க்கை மாறிப் போயிருக்கும். உட்கார்த்தி வைத்திருப்பார். அவர் பெரிய புரட்சியாளர்; அதாவது, கொஞ்சம் சிந்திக்கணும். நீங்கள் வினவியதால் சொல்கிறேன். அரவிந்தர் இந்தியத் துறவிகளில் வித்தி யாசமாக இருந்தவர். எல்லாரும் நம்மைத் திருத்திக் கொண்டு அந்த வழிக்குப் போகணும்னு சொன்னாங்க. அரவிந்தர் எழுதின சாவித்திரி படிக்கணும். ஆண்டவனையே, 'நீ என்னடா அங்கே உட்கார்ந்து பண்றே? வாடா இங்கே’’ என்கிறார். - - அதைத்தான் எதிரொலிக்கிறான் பாரதி: "அம்மா பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ பாரினில் மேன்மைகள் வேறினியார்க்கோ தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ? தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ? g (பாரதி; சுதந்தரதாகம்:2) நீ வந்து அருள் பண்ண வேண்டுமென்று பாரதி பாடுவதே, அரவிந்தருடையதுதான். சாவித்திரியில்