பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 111 போடா - அங்கே போய்க் கேளு. எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்பா... போனா பணமா கேட்பாரு? அப்படியே நின்னாரு - ம்பி வந்தாரு கேட்டாயாடா என்றார். . (b) ரு ற 'என்ன கேக்கிறது. மறந்துட்டேன்' என்றாரு. 'போடா பைத்தியக்காரனா இருக்கியே - வீடு பட்டினி கிடக்குது - திரும்பப் போய்க் கேளு" என அனுப்பி வெச்சார். திரும்பிப் போனாரு. ஒன்றும் கேட்க வில்லை. முன்போலவே மூன்றாம் முறையும் செய்தார். - பின்னர் விவேகானந்தர் உணர்ந்தார். இப்போ படிப்படியாக வளர்க்கிற முறை - இவ்வளவு தூரம் விவேகானந்தருக்குப் பண்ணினதை அவரது மச்சான் பார்த்துக்கிட்டே இருக்கான். "என் நெஞ்சிலேயும் கைவச்சு அருளுங்க" என் கிறான். பகவான் - வேண்டாம்னு எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார். சாரதா தேவி கிட்டே போய் அந்தப் புண்ணிவான் முறையிடுகிறான். * ५ "ஐயோ பாவம், அவனுக்கும் பண்ணிவிடுங்க" என்கிறார் அந்த அம்மா. பகவானால் கூட மனைவி சொல்லைத் தட்ட முடியவில்லை. நெஞ்சிலே கை வச்சவுடனே அவனுக்குப்பைத்தியம் பிடித்து விட்டது. பைத்தியமாகப் பல நாள் அலைந்தான்.