பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தொட்டனைத்துறும் மணற்கேணி பின்னர் பகவானே அவனைத் தெளிவித்தார். ஆக மொத்தம் அந்தப் பக்குவம் வரணும். இராமகிருஷ்ணர் கிட்ட நரேந்திரர் மட்டுமா போனார். எத்தனையோ பேர் போனாங்க. பகவானுக்கு யாரைத் தேர்ந்தெடுக்கணும்னு தெரியும். ஏசுநாதரைக் கூட எத்தனையோ பேர் போய்ப் பார்த்தாங்க. அவர் சிலரைத் தான் தேர்ந்தெடுத்தார். அது மாதிரி நரேந்திரன் போகும் போது அவன் யாருன்னு பகவானுக்கு உள்ளங்கை நெல்லிக் கனிபோல தெரிந்தது. அவனை அணைத்துப் பிடிச்சுக்கிட்டார். எடுத்த எடுப்பிலேயே பண்ணிட்டா மதிப்பு இல்லாமப் போகும். கொஞ்சம் கொஞ்சமாகச் சிரிக்க வச்சு, கூத்தடிச்சு... மேலே கொணர்ந்தார். அதே மாதிரி அரவிந்தர்; அந்த அம்மா பிரஞ்சுக்காரி. நம்பவே மாட்டீங்க. அந்த அம்மாவைத்தான் தேர்ந் தெடுத்தாரு. அவர்களுக்கு மட்டுமே விதிகளும், நடை முறைகளும் தகுதியும் தெரியும். நமக்குத் தெரியாது. கேள்வி: திருவள்ளுவர் மேலே ஒரு கணை தொடுக்கணும். பதில்: ஒரு கணையில்லை சார். 2000 வருஷமா எத்தனையோ பேர் தொடுத்திருக்காங்க உங்க கைவரிசை யைக் காட்டுங்க. கேள்வி: அறத்துப்பால் அதை ஏன் எடுத்துண் டார்னு தெரியலை. பொதுவாக நீதி நூல் என்கிறோம். அறத்துப் பாலில் நீதிகள் பல சொல்றார் ஒத்துக்கொள் றோம். பொருட்பால் - அதிலேயும் நீதிகள் சொல்றார்.