பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 113 அதையும் ஒத்துக் கொள்கிறோம். இன்பத்துப் பால் இதில் காதலர்களுடைய இனிய உணர்வுகளை... பதில்: உடுமலைப் பேட்டைக்காரர் எப்போ DMK ஆனார்? காமத்துப்பால் என்று சொல்லிட்டுப் போங்க ளேன். ஏன் திருவள்ளுவர் தலை மேல் ஏதோ ஏத்தறிங்க. கேள்வி: சரி சரி - காமத்துப்பாலில் காதலர்களுடைய நுண்ணிய உணர்வுகளுக்கும் தமிழர் இலக்கியத்துக்கும் ஒர் உச்சகட்டம். ஆனால் நீதி நூலில் காமத்துப்பாலுக்கு என்ன வேலை? - பதில்: ஆமாம். நீதி நூல் என்று சொன்னவுடனேயே, அவன் சாமியாராக இருக்கணும்னு எங்க படிச்சீங்க? இந்த நாட்டிலே பிரிக்கவே இல்லை. சங்க காலத் திலே ஆகட்டும் 16, 17 முடிய அவை பிரித்துப் பார்க்கப் படவில்லை. இடையிலே இந்த வேதாந்தம் என்ற பெயரிலே வந்து, பெண்டாட்டி கால் விலங்கு - பிள்ள்ை ஒரு சூளாணி என்றெல்லாம் வந்திடுச்சு. அது உண்மை யல்ல. அது மட்டுமில்லை. சங்க காலத்திலே பார்த்தீர்கள் என்றால், கடவுள் வழிபாடும் இதுவும் ஒன்றாத்தான் வைத்திருந்தான். பெண்டாட்டியோடே தான் போறான். தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் - ஆவினன்குடி அசைதலும் உரியன் என்று பாடுவான். அவனே தாவின் கொள்கை மடந்தையொடு இருக்கும்போது நான் ஏன் என் பெண்டாட்டியை