பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தொட்டனைத்துறும் மணற்கேணி விட்டுப் போகனும் விட்டிடு என்று எங்கே சார் சொல்லியிருக்கு - சரி, சிலபேர் இயற்கையிலேயே கல்யாணம், கில்யாணம் பண்ணாம, சாமியார் மாதிரி இருக்கணும்னு நினைக்கின்றனர் - சரி. 'ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கின் நவிலப்பாடி... இருக்கிறான். அந்த மாதிரி ஒரு இடமும் இருக்கிறது. சிலபேருக்கு முண்டாவை மடக்கினால்தான் புத்தி வரும். அவன் வந்து திருப்பரங் குன்றத்தில் சண்டை போட்டுக்கொண்டு போகிறான். அப்படி வேதங்களையெல்லாம் படித்து, ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி... நவிலப் பாடி இருக்கிற பிராமணனுக்கும், இவன் சுத்தப் பட்டிக்காட்டான். இவன் அந்தக் கடாவை அறுத்து, அந்த ரத்தத்தை அரிசியிலே கலந்து தூவி முருகா என்று கத்துவான் - அவனுக்கும் அங்கே முருகன் எப்படி வரான்? . இந்த உச்ச கட்டத்திலே இருக்கிற தத்துவவாதி கிட்டே போற முருகன், இந்த பாமரன்கிட்டே எப்படி வந்தான்? அதைத்தான் முதன்முதல்லே கண்டு பிடித்தான் தமிழன். உயர்ந்த தத்துவம். இதோ பாரு - அறிவின் எல்லையிலே இருக்கிற இவனும் சரி. அறியாமையிலே இருக்கிற அவனும் சரி - இரண்டு பேருக்கும் பொதுப் பண்பு ஒன்றே ஒன்று இருக்கு. அது என்ன தெரியுமா?