பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 115 சேவடி படரும் செம்மல் உள்ளம். (நான் இப்போ திருமுருகாற்றுப் படையைச் சொல்கிறேன்.) அவன் திருவடியை அடையனும் அல்லது பார்க்க ணும்ங்கிற ஒரே ஒரு எண்ணம்தான் இருக்கு. வேறு ஒன்றும் கிடையாது. அந்த எண்ணம் இருந்தால் 'நீ ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி - பெரிய தத்துவ ஞானியாக இருந்தாலும் சரி, கடாவை அறுத்து அரிசியிலே படைத்து முருகா என்று சொன்னாலும் சரி சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம் பிரிந்து உறையும் செலவு நீ நயந்தனை ஆயின். (திருமுரு:62:64) எப்படியாயினும் அவன் திருவருளை அடைய வேண்டுமென்ற எண்ணம் உனக்கு உண்டாயின், இன்னே பெறுதி நீ முன்னிய வினையே. இந்த வினாடியே உனக்குக் கிடைப்பான். எங்கே கிடைப்பான்? சதுக்கமும் சந்தியும் புதுப் பூங் கடம்பும் மன்றமும் பொதியிலும், கந்துடை நிலையினும் (திருமுரு:225:226) வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்தவாறே (திருமுரு)