பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொட்டனைத்துாறும் மணற்கேணி பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் மிகச் சிறந்த ஒரு தலைப்பைக் கொடுத்திருக் கிறார்கள் - தொட்டனைத்துறும் மணற்கேணி என்று. திருக்குறள் முழுவதையும் பார்த்தீர்களானால் பின்னே வந்த பாட்டி பாடினாளே இளமையிற் கல்’ என்று - அவர் சொல்லவே இல்லை. அதே மாதிரி இன்றைக்கு மருத்துவ இயக்கம் வளர்ந்த நிலையிலே - குழந்தை மருத்துவத்துக்கு 'பீடியாட்ரிக்ஸ் என்று சொல்வதுபோல முதியோர் மருத்துவத்துக்கு ஜீரியாட்ரிக்ஸ்’ என்று சொல்வார்கள். நாம் எல்லாரும் இதனை நினைத்துக் கொண்டிருந்தோம் 'மறந்து போச்சுன்னா, ஆமா வயசாச்சுன்னா மறக்க வேண்டியது தானே' - என்று; அது தப்பு - அப்படி மறக்கிறது என்பது தேவையே இல்லை. மூளையிலே இருக்கிற ந்யூரான்ஸ் என்று சொல்வார்களே எத்தனையோ மில்லியன்ஸ் நீயூரான்ஸ் இருக்கின்றனவாம். அதிலே மிகப் பெரும் பகுதியை யாருமே அதிகம் உபயோகப் படுத்துகிறதே இல்லையாம்; ஐன்ஸ்டின் மாதிரி உலகத்திலே பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகூட 15% தான் பயன்படுத்துகிறார்கள். நாம் .001கூடப் பண்ணமாட் டோம். அந்த நியூரான்களுக்கு வேலை கொடுக்கிறது இல்லை.