பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தொட்டனைத்துறும் மணற்கேணி இந்த geriatrists என்கிற மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? அப்படி வேலை கொடுத்துப் பழகி னால் உங்களுக்கு மறதி என்பது வராது என்கிறார்கள். 'அப்படீன்னா, படிக்கிறத்துக்கு என ஒரு வயசு கிடை யாது. சிந்திக்கிறத்துக்கு என ஒரு வயசு கிடையாது. எப்பொழுது வேண்டுமானாலும் சிந்தித்துக் கொண்டே இருந்தோமானால், மறந்துபோகிறது என்கிற பிரச்சினையே வரப் போவதில்லே என இன்றைக்கு ஜீரியாட்ரிக்ஸ் பற்றித் தெரிந்த மருத்துவர்கள் பேசுகிறார்கள். இந்த வள்ளுவன் பார்த்தான், 'இளமையிற் கல்' என்றால் 'முதுமையில் வேண்டாம் என்றல்லவா அர்த்தமாகிப் போகும். ஆகவே, இளமையிற் கல்' என்று அவன் சொல்லவே இல்லை. - 'தொட்டனைத்துறும் மணற்கேணி என்பதாக ஒரு அழகான உதாரணம் காட்டினான். இதிலே Hydrologists 'நிலத்தடிநீர் கண்டுபிடிக்கிறவர்கள் கூட ஒரு இடத்திலே எவ்வளவுதான் தண்ணிர் இருக்கிறது என்றால் அதில் Percentage error எவ்வளவு என்றுதான் சொல்வார்கள். ஏன் இந்த உதாரணம்? தொட்டனைத்துறும் மணற் கேணி என்றால் பத்தடி தோண்டும் போது 10 லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது என்றால் 50 அடி தோண்டும் போது 10 அல்ல, இன்னும் மேலே கிடைக்கும். ஆக, போகப்போக அதிகமான தண்ணீரைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். முடிவில்லை. "போர்வெல் (ஆழ்துளைக் கிணறு) 150 அடி போடு கிறார்கள்; 500 அடி கூடப் போடுகிறார்கள். அப்போ ஏன்