பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தொட்டனைத்துாறும் மணற்கேணி அப்போது மணற்கேணியிலே என்ன இருக்கு? பாறையிலே தண்ணிர் இல்லையா? இருக்கு. தெரியும் வள்ளுவனுக்கு. அப்போது ஏன் மணற்கேணியைச் சொன்னார் என்றால், நீ பண்ணுகிற முயற்சியை விடப் பலன் அதிகமாகக் கிடைக்கும். பாறைக் கேணியில் முயற்சி ரொம்ப ஜாஸ்தியாக இருக்கும். பலன் எவ்வளவு இருக்கும் என்று சொல்ல முடியாது. மணற்கேணியில அப்படி இல்லை. சும்மா கையினாலே பறிச்சாலே போதும். அதை நினைக்கிறார் சேக்கிழார். இந்தத் தொட்டனைத்துறும் மணற்கேணி என்கிற அற்புதமான உவமை அவரிடம் வேலை செய்கிறது. எங்கே பயன்படுத்துவது? பழங்காலத்துப் புலவன் என்றால் புகுந்து விளையாடிவிடுவான், 'சாக்கடையெல்லாம் தீர்த்தம்' என்று. சேக்கிழார் அப்படிப் பாடுகிற ஆள் இல்லை. வரலாற்றுமுறையில் (Historical) பாடவேண்டும் என்று நினைக்கிறார். எங்க ஊரிலே (தொண்டை நாட்டிலே) ஒரு ஆறு இருக்கிறது. அதற்குப் பாலாறு' என்று பெயர். அதில் பால்தான் ஒடும். அதாவது பெளர்ணமி அன்று பார்த்தீர்களானால் அப்படியே பால் ஒடுகிற மாதிரி இருக்கும். மழை பெய்யிற போதும் தண்ணியே ஓடாத இந்த ஆற்றைச் சொல்லணும். அவர் தொண்டை நாட்டுக்காரர். அதான் ப்ராப்ளம். எங்க ஊர் ஆற்றிலே மழை பெய்தால் போதும். இதை எப்படிச் சொல்வது எனப் பார்க்கிறார். -