பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 5 கம்பன் இதற்கு முன்னாலே ஒரு தப்புப் பண்ணி விட்டான். அவன் சரயூ நதியைப் பாட வந்தான். சரயு என்பது தாய் முலை அன்னது (கம்ப - பாலகாண்டம் 1-12) என்று பாடிவிட்டான். தாய்ப்பால் எப்படிப் பால் சுரக்குமோ அதுபோலச் சரயு நதி சுரக்கும். இதிலே அதி வியாப்தி குற்றம்’ என்று ஒன்று இருக்குது. அந்த உவமை முற்றிலும் பொருந்தாத உவமை. குழந்தை பால் குடிக்க ஆரம்பித்தால்தான் பால் வரும் தாய்க்கு. வாயை எடுத்துவிட்டால் பால் நின்றுபோகும். அது மாதிரியா சரயு? அப்போது இந்த உதாரணம் பொருத்தமில்லை. 'தொட்டனைத்துறும் மணற்கேணி வள்ளுவனுடைய இந்த உவமையைப் பயன்படுத்தணும். கம்பன் பண்ணின தவற்றைச் சரி பண்ணனும். என்ன பண்ணனும் என்று பார்க்கிற போது சரியாகப் பட்டது பாலாறு. தண்ணி ஓடாத ஆற்றை என்னமாய்யா பாடறது? 'தண்ணி ஓடாது' என்று அப்படி யெல்லாம் சொல்லி விடாதீர்கள். மள்ளர் வேனிலின் மணல்திடர் பிசைந்து கைவருட வெள்ள நீர் இரு மருங்குகால் வழிமிதந்து ஏறிப் பள்ளகீள் வயல் பருமடை உடைப்பது பாலி - (பெ.பு. திருக்குறிப்பு. 22) கோடைக் காலத்திலே கூட... வேனிலில் கூட நல்ல வெய்யில் காலத்திலே கூட பிசைந்து கை வருட - பறிச்சு அப்படி மண் எடுத்தான்னா தண்ணிர் வரும்.