பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தொட்டனைத்துறும் மணற்கேணி உண்மை. இன்றைக்கும் பாலாற்றிலே தோண்டினால், தண்ணீர் வரும். தண்ணிர் இல்லாத ஆற்றைப் புகழவும் வேண்டும். மணற் கேணி என்று சொன்னாரே அந்த உதாரணத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். கம்பன் இப்படி ஒண்னு கிடக்க ஒண்ணு சொல்லி விட்டானே அதையும் சீர் செய்ய வேணும். ஆகமொத்தம் இவன் எவ்வளவு முயற்சி பண்றானோஇரண்டடி தோண்டினால் அதற்குத் தகுந்த தண்ணீர் வரும், பத்தடி தோண்டினால் அதற்குத் தகுந்த தண்ணிர் வரும், இருபதடி போனால் அதற்குத் தகுந்த தண்ணிர் வரும். ஆக, தொட்டனைத்துறும் மணற்கேணி என்கிற அந்த உவமை இருக்கிறதே, சிந்தித்துச் சிந்தித்து மகிழ வேண்டிய ஓர் உவமை. அதை எதற்குச் சொல்ல வருகிறான்? மாந்தர்க்குக் கற்றனைத்துறும் அறிவு. கற்றல் என்று சொன்னவுடன் தயவு செய்து புத்தகத்தைப் படித்தல் என்று நினைத்துவிடாதீங்கள். பகவான் ராமகிருஷ்ண ருக்குக் கையெழுத்தே போட வராது. முழங்கையால்தான் போடுவார். ஆனால், ஏக சந்தகிராகியாளராகிய விவேகானந்தர்கூட அங்கே உட்கார்ந்து பயபக்தியாக கேட்க வேண்டிய அளவுக்கு அமைந்த ஞானம் அது. 'M' என்ற ஒருவர் அதை record பண்ணியிருக்கிறார். பார்த்தீர்கள் என்றால், அவரது வாயிலிருந்து வருகிற வார்த்தைகள் பெரிய விஞ்ஞானி, அல்லது பெரிய தத்துவ ஞானி கூட முக்கி முக்கி விளக்க ஆரம்பித்தால் புரிந்து கொள்ள முடியாததை எளிதில் புரிய வைத்தன.