பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தொட்டனைத்துறும் மணற்கேணி என்று பாடுகிறார். அறிதல் என்று ஒரு வார்த்தை இருக்கிறது; தெரிதல் என்று ஒரு வார்த்தை இருக்கிறது; கற்றல் என்று ஒரு வார்த்தை இருக்கிறது; சிந்தித்தல் என்று ஒரு வார்த்தை இருக்கிறது. இத்தனையும் விட்டு விட்டார். ஏன் என்றால் ஐந்து வயதிலே கற்க முடியாது. சிந்தித்தலும் சாத்தியம் இல்லை. இரண்டும் இல்லை என்றால் தெளிதல் இல்லவே இல்லை. கேட்டல் யார்கிட்டே போய் ஐந்து வயது பையன் என்னத்தைக் கேட்டிருக்கப்போகிறான்? பின்னே எப்படி இதெல்லாம் வந்தது? தாம் உணர்ந்தார் என்ற அந்த வார்த்தையைப் போட்டார். உணர்தல் என்ற வார்த்தையைப் போட்ட o__Gans he is not responsible for that; product has been given to him. யாரோ கொடுக்கிறார்கள். அதை அப்படியே வாங்கிச் சொல்கிறார். அது மாதிரி இவருக்கு அறிவு விளக்கம் தருகிறது. இந்த உணர்தல்' என்ற வார்த்தையின் நுணுக்கத்தைச் சேக்கிழார் தான் முதன் முதலே உபயோகப்படுத்தியிருக் கிறார். 'தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந் நிலையில். அறிந்தார் என்று சொல்லவில்லை. உணர்ந்த பிற்பாடு அதைச்சொல்வது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டிலே இந்த etymology என்னவென்று தெரிந்து, அதை உபயோகப்படுத்துகிறார் சேக்கிழார்.