பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 9 பாரதி வருகிறான். அப்படியே அந்தச் சொல்லில் ஈடுபடுகிறான். அவன் தருமன் சூதாடுவதைச் சொல்ல வருகிறான். கோயில் பூசை செய்வோர் ിഞ്ഞു கொண்டு விற்றல் போலும். - (பாரதி. பாஞ்சாலி சபதம். 219) இது இப்போது தான் நடக்கிறது. நடராஜாவைத் தூக்கிக்கொண்டு போவது என்று நினைக்காதீங்க. தமிழ்நாட்டிலே எப்போது இருந்தோ நடந்துவந்தது. (இது பழமையான வியாபாரம்) கோயில் பூசாரியே விற்று விடுவான். * கோயில் பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும் வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்திழத்தல் போலும் ஆயிரங்களான நீதி அவைஉணர்ந்த தருமன்நேயம் வைத்திழந்தான் சீச்சீ.சிறியர் செய்கை செய்தான் - - - (பாரதி.பாஞ்சாலி சபதம் - 219) ஆயிரங்களான நீதி அவை உணர்ந்த தருமன் என் கிறான். அறிந்த என்று சொல்லவில்லை. அறிந்தவன் என்ன பண்ணுவான்? பிரமாதமாகச் சமாதானம் சொல்வான். பட்டிமண்டபத்தில் பேசித் தன் கருத்தை ஏற்றுக் கொள்ளச் செய்து விடுவான். ஆயிரங்களான நீதி அவை உணர்ந்த தருமன் - நாட்டை வைச்சு