பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O தொட்டனைத்துறும் மணற்கேணி விளையாடிட்டானே - அற்பப்பயல் - என்கிறாள். உணர்ந்த என்ற சொல்லையே பாரதி இங்கே உபயோகிக்கிறான். பன்னிரண்டாம் நூற்றாண்டிலே சேக்கிழார் பயன் படுத்திய சொல்லைப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே பாரதி பயன்படுத்தினான். கம்பன் எப்படி? இரண்டு பேருக்கும் தாத்தா. ஏன் என்றால் வள்ளுவன் காலத்துச் சாரத்தை அப்படியே வாங்கினவன் அவன். இராவணன் இந்த மாதிரித் தப்புப் பண்ணிவிட்டான். மாரீசன் அவனைத் திட்ட வருகிறான். கும் பகர்ணன் அவனைத் திட்ட வருகிறான். இந்த இரண்டு பேர்தான் அவனைத் தப்புப் பண்ணிட்டேடா என்று திட்டுகிற வர்கள். ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய் தீயினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய் ஏயின உறத் தகைய இத் துணைய வேயோ? (கம்ப - மந்திராலோசனை - 48) கும்பகர்ணன், இராவணன் அண்ணன்' என்கிற மரியாதை யோடு தான் பேசுகிறான். ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய் அறிந்தது அல்ல உணர்ந்து அறிவு அமைந்தாய். ஆயிரம் மறையை அல்ல - மறைப்பொருளை உணர்ந் தாய். யார்? கும்பகர்ணன் பேசுகிறான். எல்லாரையும் போல அத்யயனம் பண்ணி அல்ல. தவளைக் கத்திக்