பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 11 கிட்டிருக்கிற மாதிரி இல்லை. ஆயிரம் மறைப் பொருளை உணர்ந்து அதனால் அறிவு அமைந்தவன். தீயினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய் நெருப்பை எடுத்து மடியிலே கட்டிக்கொண்டான். இதனைத் தான் பின்னர் அக்கினிக் குஞ்சு ஒன்று கண்டேன் என்று பாரதி பாடினார். இது கம்பனில் இருந்து வாங்கியது. அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டு விட்டாயே நெருப்பை. இது மட்டுமா வரப்போகுது. என்னன்னவோ வரப்போகுது - ஆக, இந்த உணர்தல் என்ற சொல்லை இப்படி வாங்கிக் கொள்கிறார்கள். இதுதான் தொட்டனைத்து ஊறுதல். அதாவது ஒரு சொல்லை ஒரு மாபெரும் கவிஞன் எப்படி எப்படி உபயோகப் படுத்தியிருக் கிறான். அதுதான் உள்ளுணர்வு. இப்போது ஒரு குழந்தை படிக்கிறது குறளை ஒரு பாட்டைக் குழந்தை படிக்கிறதுக்கும் நாம் படிக் கிறதுக்கும் என்ன வித்தியாசம்? வெறும் பதத்தைக் குழந்தை படிக்கும். அதுக்கு மேலே போக முடியாது. இருபத்தைந்து வயது. இப்போது பதத்தை விட ஆழமாகப் போகலாம் - ஏன் அப்படிச் சொன்னான் என்று. இன்னும் வயசு ஆக ஆக அதை இந்தப் பய அப்படிச் சொன்னானே அது ஏண்டா? என்று ஆராயலாம்.