பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 13 பேரும் சேர்ந்து செய்த ஆராய்ச்சியைச் சேர்த்துக் கற்றனைத்துறும் அறிவு என்று வைத்தான். நீ மேன் மேலே படிக்கப் படிக்க ஊறும் என்று சொன்னானே - என்ன அர்த்தம்? அப்போ, இந்த ந்யூரான்கள் சேர்த்து வைச்சிருக்கு; உனக்கே தெரியாது அந்த உடைமை. எவ்வளவுன்னு. அதை யாராவது எடுத்துக்காட்டினாப் புரிந்து கொள்ள முடியும். அதை வேறு விதமா உங்களுக்குச் சொல்லணும்னா, ஆளவந்தார் என்று ஒர் ஆசாரியர். அவர் ஈசுவர முனிகளின் மைந்தர்; நாதமுனிகளின் பேரர். அவரை அரசனும் அரசியும் தங்கள் அரண்மனையில் வளர்த்தனர். அரசன் தான் நாட்டில் பாதி கொடுத்தான். அவருடைய தாத்தா நாதமுனிகள் மிகப் பெரிய வைணவ பக்தர். பேரப் பையன் நல்ல வயசுக்கு வந்து இவரை வளர்க்கிற காலத்துல அவர் காலமாகி விட்டார். மணக்கால் நம்பி அவருடைய சீடர். மணக்கால் நம்பியைக் கூப்பிட்டார். 'அந்த பேரன் ராஜாவாப் போய்விட்டான். நீ எப்படியாவது அவனைக் கரையேற்றிக் கொண்டு வரணும். என்று கூறினார். --- மணக்கால் நம்பி ரொம்ப அறிவுள்ளவர். திடீரென்று ராஜாகிட்டே போய் நின்று ஒங்க தாத்தா இதையெல் லாம் விட்டு விட்டுப் பெருமாளைச் சேவி என்று சொன்னார் என்றால், சரி 'நீ போய்ச் சேவித்துக்கிட்டு இரு. நான் பின்னாலே வந்து பார்த்துக்கிறேன் என்பான். மகா அறிவாளியாகிய அவர் என்ன பண்ணினார்? He never wanted an interview with the king.